பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி.
பரங்கிப்பேட்டை குமரன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற ராஜாராமன் (45). இவர், நேற்று (03.07.2012) சந்ததோப்பிற்கு பின்னால் ஆற்றுக்கு அந்த பக்கம் உள்ள பின்னத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து பரங்கிப்பேட்டை செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பியை பிளேடால் அறுத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது மின்சாரம் பாய்ந்து ஒரு கை துண்டாகி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே ராஜாராம் இறந்தார். இதைப்பற்றி தகவலறிந்த காவல்துறை தீயனைப்பு துறை மற்றும் மின்சாரத்துறையினரின் உதவியுடன் உடலை மீட்டணர்.
அப்போது மின்சாரம் பாய்ந்து ஒரு கை துண்டாகி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே ராஜாராம் இறந்தார். இதைப்பற்றி தகவலறிந்த காவல்துறை தீயனைப்பு துறை மற்றும் மின்சாரத்துறையினரின் உதவியுடன் உடலை மீட்டணர்.
இது குறித்து மின்வாரிய உதவி செயற் பொறியாளர் மோகன்காந்தி கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சந்தைதோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
நன்றி:tntjpno
No comments:
Post a Comment