Islamic Widget

July 19, 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: உலகின் மெளனம் குறித்து எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்!


Photo of The Proofs of Violence in Arakan,போபால்:மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டாக கொலைச் செய்யப்படுவதை பார்த்துக்கொண்டு மெளனம் சாதிக்கும் சர்வதேச சமூகத்தின் செயல்பாடு குறித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.
நாகரீக உலக சமூகங்களை கொண்ட சர்வதேச நாடுகள் குறைந்த பட்சம் இந்த படுகொலைகளை குறித்து கவலையாவது கொள்ளுமாறும், துன்புறுத்தப்படும் சமூகத்தினருக்கு அமைதி கிடைக்கும் விதமாக இப்பிரச்சனையில் தீவிரமாக தலையிடுமாறும் சர்வதேச நாடுகளை எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ரோஹிங்கியா முஸ்லிம்கள்பல நூற்றாண்டுகளாக தங்களது சொந்த தாயகமாக கருதப்படும் தேசத்தில் இருந்து மியான்மர் அரசு அவர்களது குடியுரிமையை பறித்ததோடு கூட்டாக கொலைகளை புரிந்து இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனை உலகம் ஒரு மெளன பார்வையாளராக பார்த்துக்கொண்டு இருக்கிறது.
மியான்மரில் பேரழிவுகள் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது உலக சமூகமும், ஊடகங்களும், வளைகுடா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் கூட அங்கு ஒரு பயங்கரமும் நடக்காததுபோல் இருப்பதை கண்டு தனது அவநம்பிக்கையையும், வருத்தத்தையும் இ.அபூபக்கர் வெளியிட்டார்.
இம்மாதம் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மியான்மர் முஸ்லிம்கள் ராணுவம், போலீஸ், பெளத்த பயங்கரவாதிகளால் கொலைச் செய்யப்பட்ட பிறகும் மனித உரிமை ஆர்வலர்களின் உள்ளத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை என இ.அபூபக்கர் குறிப்பிட்டார்.
அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றுள்ள ஆங்க் சான் சூகி தற்பொழுது உலக சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் கூட தனது நாட்டில் வன்முறை நடப்பது குறித்து ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் வன்முறைகளை தடுக்காமல், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மாவின் சிறுபான்மை சமூகமா? என்பது குறித்து கேள்வி வேறு எழுப்புகிறார். அவரது செயல்பாடு புதிராக இருப்பதாக அபூபக்கர் குறிப்பிட்டார்.
ஆங் சான் சூகி, இராணுவ அரசிடமிருந்து துயரங்களை சகித்துள்ளார். ஆனால் இன்று ராணுவம் நடத்தும் குற்றங்களுக்கு கூட்டாளியாக உள்ளார். அவர் மேற்கத்திய சக்திகளால் அழகாக ஆட்டுவிக்கப்படுகிறார். இதுவரை பிடித்து வைக்கப்பட்டிருந்த சலுகைகள் அவருக்கு கிடைத்திருப்பதில் ஆச்சரியமடையத் தேவையில்லை என்ற தனது கருத்தை வெளியிட்டார் அபூபக்கர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சனைக் குறித்து இந்திய அரசு சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என அபூபக்கர் கோரிக்கை விடுத்தார். அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர்(UNHCR) ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அகதிகள் அந்தஸ்தவை வழங்குவதோடு அகதி முகாம்களில் அவர்களை தங்கவைத்து பெளத்த தீவிரவாதிகளிடமிருந்து முஸ்லிம்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என அபூபக்கர் கோரிக்கை விடுத்தார்.
அகதிகளுக்கான ஐ.நா ஏஜன்சி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக அகதி முகாம்கள் அமைப்பது குறித்த எண்ணத்தை கைவிட்டது குறித்து அபூபக்கர் தனது கவலையை வெளியிட்டார்.
மியான்மர் அரசு பல தசாப்தங்களாக பாரபட்சமான முறையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கல்வி, நடமாடுதல் மற்றும் நிலம் வாங்குதல், பொதுசேவைகள் ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை நாடு இல்லாதோர் போல் நடத்துவதாக ஐ.நா கூறியிருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட அடக்குமுறைகளை மியான்மர் முஸ்லிம்கள் மீதி திணித்து வருகிறது.
மியான்மரில் பல நூற்றாண்டுகளாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தபோதும் அவர்களை மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்க மியான்மர் அரசு மறுப்பதோடு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என குற்றம்சாட்டுகிறது என இ.அபூபக்கர் தனது வருத்தத்தை தெரிவித்தார்

No comments:

Post a Comment