Islamic Widget

July 30, 2012

துப்பாக்கியில் வேண்டாம் அறிவில் காட்டுங்கள் - டி.ஜி.பி பேச்சு!

துப்பாக்கியில் வேண்டாம் அறிவில் காட்டுங்கள் - டி.ஜி.பி பேச்சு!குற்றச் செயல்களில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க புலன் விசாரணையில் அறிவியல் சார்ந்த திறமையைக் காட்டுங்கள், துப்பாக்கி திறமையை தயவு செய்து காட்ட வேண்டாம் என்று தமிழகக் காவல்துறை தலைமை இயக்குனர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கான 56 வது மாநில காவல்துறை பணித் திறனாய்வுப் போட்டிகள் சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த  வாரம் நடைபெற்றது. 6 பிரிவுகளில் நடத்தப் பட்டப் போட்டிகளில் 23 அணிகள் சார்பில் 127 பெண்கள் உட்பட 565 பேர் கலந்து கொண்டனர்.
முதல் இரண்டு இடங்களை சென்னை மாநகர காவல்துறை அணியும் மூன்றாவது இடத்தை திண்டுக்கல் சரக அணியும் கைப்பற்றி கோப்பைகளை வென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஜி.பி ராமானுஜம் '' குற்றவாளி எதையும் விட்டு விட்டு செல்வான் என்று எதிர்பார்க்கக் கூடாது.ஆனாலும் தமக்கே தெரியாமல் எதையாவது விட்டு விட்டு செல்வான் என்பது இயற்கை விதி. அதன் படி அவன் எதை விட்டுச் சென்றான் என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் தான் காவல்துறையினரின் திறமை இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் சி.சி.டி.வி இல்லாத நிலையில் காவல்துறையினர் திறமையாக விசாரணை செய்து குற்றவாளியைக் கண்டுபிடித்தனர். இதைப் போன்று அறிவியல் சார்ந்த புலன் விசாரணையில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். துப்பாக்கித் திறமையில் தயவு செய்து உங்கள் திறமையைக் காட்ட வேண்டாம் '' பேசினார்.

No comments:

Post a Comment