இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கலவரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை மீண்டும் கட்டிக் கொடுக்கவும், சீரமைத்து தரவும் மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவில், "வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா? என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யும். மேலும் குஜராத் கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று மாநில அரசு அளவிட வேண்டும்." என உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment