பாட்னா:ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி ஹிந்து தீவிரவாத அமைப்பின் தலைவர் பிரமேஷ்வர் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி ஹிந்து தீவிரவாத படையை வழி நடத்திய பிரமேஷ்வர் சிங் என்ற முக்கிய ஜி, பல்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியில் உள்ளார்.
நிலமில்லாத தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு எதிராக நிலச்சுவான்தார்களின் சார்பில் சட்டவிரோத ஆயுதம் தாங்கிய படையான “ரன்வீர் சேனை’ என்ற அமைப்பை 1990-களில் அவர் நிறுவினார்.
1996-ல் லக்ஷ்மண் பூர்பாத் என்ற இடத்தில் 61 தலித்துகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரலில் தான் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுவிக்கப்பட்டார்.
1990-களில் ஜகன்னாபாத், அவுரங்காபாத், நவாதா பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளில் பிரம்மேஸ்வர் சிங்குக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரம்மேஸ்வர் சிங் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும், அவரது ஆதரவாளர்கள் போஜ்பூர் மாவட்டம், ஆரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர்; பீகார் அரசை கண்டித்து கோஷமிட்டனர்; 5 பஸ்களுக்கு தீவைத்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல் கண்காணிப்பாளரை விரட்டி அடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் நாள் முழுவதும் தடை உத்தரவு அமலில் இருந்தது.
பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
பாட்னாவிலிருந்து அப்பகுதிக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்துரத்து செய்யப்பட்டது.
“நிலைமை பதற்றமாக இருந்தபோதும், கட்டுக்குள் இருக்கிறது” என்று காவல்துறை அதிகாரி தர்மேஷ் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இறுதி ஊர்வலத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காத வண்ணம் காவல்துறை தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
No comments:
Post a Comment