அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறியதால் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்குத் தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தார். பின்னர் மேல்முறையீட்டின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது
இந்த இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக இதுவரை இவ்வழக்கு 39 முறை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி (பொறுப்பு) ஈஸ்வரமூர்த்தி இவ்வழக்கை நாற்பதாவது முறையாக மே 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
No comments:
Post a Comment