பரங்கிப்பேட்டை: இன்று இந்தோனேஷியாவைத் தாக்கிய கடும் பூகம்பத்தின் எதிரொலியாக பல நாடுகளுக்கு சுனாமி – பேரலை எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் மெரினாவை சாயந்தரம் 5 மணிக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளது என்ற செய்தியும் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்தியும் தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதால் பரங்கிப்பேட்டையில் அந்த பீதி சுமார் மூன்று மணி நேரங்கள் கவ்வி கிடந்தன. கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கடற்கரைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டன.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்திலிருந்து pnotimesக்கு போன் அழைப்பு வந்தது. சின்னூர் – புதுப்பேட்டை உட்பட கிராமங்களுக்கு இந்த செய்தியை எத்தி வைக்க சொன்னார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் கூடிய இளைஞர்களை உஷார் நிலையிலிருக்குமாறு டாக்டர்.நூர் முஹம்மத் கூறினார்.
ஜாமிஆ மீராபள்ளி, ஜாமிஆ அப்பாபள்ளிகளில் ஒலிபெருக்கு வழியாக மக்களுக்கு இந்த செய்தி எத்திவைக்கப்பட்டன.
நேரம் கடந்து சுனாமி பீதியிலிருந்து ஓரளவு மக்கள் விடுபட்ட நிலையில் அந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தது.
சி.மானம்பாடியை சார்ந்த படிக்கும் இளைஞர்கள் 14பேர் கிரிகெட்விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சுனாமி செய்தி கிடைக்கின்றது. பதறியவர்கள் தங்கள் நண்பருக்கு போன் செய்து தங்களை அழைத்துச் செல்லக் கோருகிறார்கள். 50 தர்பூசணிப் பழங்களோடு வந்த நண்பரின் வண்டியில் 14 இளைஞர்களும் ஏறிக் கொள்கிறார்கள். வண்டி வந்துக் கொண்டிருக்கும் போது டயர் பஞ்சர் ஆகி ஒரு திருப்பத்தில் வண்டி கவிழ்கின்றது. டிரைவர் உட்பட 5 பேர்களுக்கு பலத்த அடி. இதில் தகனமூர்த்தி என்பவர் கடலூர் சிகிட்சைக்காக கொண்டு செல்லும் வழியில் காலமாகிறார். பரங்கிப்பேட்டை மருத்துவ மணையில் டிரைவர் உட்பட பிறர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் வாக்குமூலம் வாங்கி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
நன்றி:pnotimes
No comments:
Post a Comment