Islamic Widget

April 01, 2012

இன்று மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை!


பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு 3 ரூபாய் அல் லது 4 ரூபாய் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகார ம், கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதத்துக்கு இரண்டு
தடவை மாற்றி அமைத்து வருகின்றன. இ ருப்பினும், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றே இதை செய்து வருகின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வு கடந்த 3 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, இத்தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால், பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, உற்பத்தி செலவுக்கு குறைவாக பெட்ரோலை விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில், ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நஷ்டத்தை ஓரளவுக்கு சரிக்கட்ட நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:-

பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு 6 ரூபாய் 43 காசுகள் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 20 சதவீத விற்பனை வரியையும் சேர்த்தால், பெட்ரோலை லிட்டருக்கு 7 ரூபாய் 72 காசுகள் விற்றால்தான் கட்டுப்படி ஆகும்.

ஆனால், ஒரேயடியாக அவ்வளவு உயர்த்துவது கடினம். இருப்பினும், லிட்டருக்கு 3 ரூபாய் அல்லது 4 ரூபாய் உயர்த்துவது சாத்தியம்தான். இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment