Islamic Widget

March 08, 2012

வக்ஃப் டிரஸ்டிகள் சம்மதிக்கட்டும் – M.L.A



பரங்கிப்பேட்டை: 6ம் தேதி மாலை பரங்கிப்பேட்டைக்கு திடீர் விஜயம் செய்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி , இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர்.நூர்முஹம்மதுவை அவரது மருத்துவமனையில் சந்தித்து அவருடன் ஜமாஅத் அலுவலகம் வந்து அங்கிருந்த ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு குடிசைப்பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

  • டெல்லி சாஹிப் தர்கா வளாகம்
  • அக்காஸ் தைக்கால் குடிசைப்பகுதி
  • கவுஸ்பள்ளிக் குடிசைப்பகுதி
டெல்லி சாஹிப் தர்கா பகுதி வாழ்க்கைத் தரத்தைப் பார்த்து வருத்தப்பட்ட அவர், சூழ்நிலைக் குறித்து ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மழைக்காலத்தில் மக்கள் படும் அவதி, குடி தண்ணீர் தட்டுப்பாடு, சுகாதார கெடுதிகள் உட்பட மக்கள் பாதிப்புகளை நிர்வாகிகள் விளக்கினர்.

ரோடு வசதி குறித்து பேசும் போது ”வக்ஃப் சொத்தாக இருப்பதால் அரசாங்கம் துரிதமாக எதுவும் செய்ய முடிவதில்லை. இந்த வக்ஃபின் பொறுப்புதாரி ரோடு போடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்று எழுதி கொடுத்தால் நாம் ஏற்பாடு செய்யலாம்” என்று கேபி கூறினார். ஜமாஅத் தலைவர் ”ஏற்பாடு செய்யலாம்” என்றார்.
தொடர்ந்து மற்றப் பகுதிகளை பார்வையிட சென்ற போது pnotimes கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டைம்ஸ்: இந்த திடீர் வருகைக் குறித்து…
எம் எல் ஏ: ஜமாஅத் பதவியேற்பு விழாவின் போது ஆரிப் ஒரு கோரிக்கை வைத்தார். தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒரு லட்சம் வீடு கட்டி கொடுக்க உள்ளது அதில் எங்கள் ஏழைகளுக்கு வீடு ஒதுக்குங்கள் என்றார். அது குறித்து வந்தேன்.
டைம்ஸ்: டெல்லிசாஹிப் தர்கா சுற்றுப்புறத்தை பார்த்தீர்களா..
எம்.எல்.ஏ: சாக்கடை வடிகால் மிக மோசமாக உள்ளது. கடுமையான நாற்றத்துக்கு மத்தியில் அந்த மக்கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஒரு ஏரியாவா என்று எண்ணத் தோன்றுகின்றது.
டைம்ஸ்: ரோடு வசதி இதர வசதிகளுக்கு நடவடிக்கை எடுப்பீர்களா..
எம்.எல்.ஏ: இது அரசாங்கத்திற்கு சொந்மானதாகவோ, புறம் போக்காகவோ இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர் செய்து விடலாம். இது வக்ஃப் பிராபர்டியாக இருப்பதால் தான் சிக்கல்.
டைம்ஸ்: என்ன சிக்கல்..
எம்.எல்.ஏ: வக்ஃப் சொத்தில் அரசு கை வைக்க முடியாது. அதற்கென்று நிறைய ஃபார்மால்டிஸ் இருக்கு. அதையெல்லாம் செய்தால் தான் முடியும்.
டைம்ஸ்: ரோடு வசதி, வடிகால் வசதி, தண்ணீர் வசதிகூட இல்லாமல் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்றால் இதற்கு தீர்வு என்ன?
எம்.எல்.ஏ: இந்த இடங்களில் டிரஸ்டியாக இருப்பவர்கள் “அரசு இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்று எழுதி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எங்களால் பல வசதிகளை செய்து கொடுக்க முடியும்.
டைம்ஸ்: வக்ஃப் சொத்தில் அரசு தலையிடாது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவை மக்களின் பயனுக்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அரசு தலையிட்டு அதில் மாற்றங்கள் கொண்டு வர முடியாதா..
எம்.எல்.ஏ: தொடர்ச்சியாக கடுமையாக முயற்சிப் பண்ண வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பி கவன ஈர்ப்பு கொண்டு வந்து எடுத்து சொல்ல வேண்டும்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரை கும்மத்து அரசு மேநிலைப் பள்ளிக்கு அழைத்து சென்று அந்த அவலங்களை காண்பித்தோம்.


பிறகு ஜமாஅத் அலுவலகத்திற்கு வந்து தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் கிளம்பினார். இந்த சந்திப்பில் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
(குறிப்பு: தானே புயலுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு கட்டும் திட்டத்திற்கு சொந்த இடம் வைத்துள்ளர்கள் இடத்திற்கான பத்திர நகல், வீடு கட்டுவதற்கான கோரிக்கை மனு போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இத்திட்டம் துரிதப்படுத்துப்படும் போது ஆவனங்களை காண்பித்து ரூ.ஒரு லட்சம் வரை நிதியுதவிப் பெறலாம் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)

(குறிப்பு:- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மக்கள் சேவைப் பிரிவு டெல்லிசாஹிப் தர்கா ஏரியாவில் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அமீராக வந்துள்ள அப்துல்கறீம் டெல்லி சாஹிப் தர்கா நிலைக் குறித்தும், பரங்கிப்பேட்டை நிலை குறித்தும் நமக்கு அளித்தப்பேட்டி விரைவில்)

நன்றி:pnotimes

No comments:

Post a Comment