Islamic Widget

February 18, 2012

செல்போன் டவர் கதீர்வீச்சால் பறவைகள் அழிகின்றனவா? - ஆய்வு நடத்த உத்தரவு

Bird Falloutசென்னை: செல்போன் டவர் கதிர்வீச்சால் பறவைகள் சாகின்றனவா? என்பது குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தரவேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியின் வணிக மேலாண்மை கல்வி நிறுவனம் (லிபா) சார்பில் வணிக நெறிமுறை கருத்தரங்கம் அண்ணா சாலையில் உள்ள 'ஹயாத்' ஓட்டலில் நேற்று நடந்தது.
லிபா டீன் இம்மானுவேல் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். இயக்குனர் பாதிரியார் கிறிஸ்டி வரவேற்றார். இந்த கருத்தரங்கை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தொடங்கி வைத்து பேசுகையில், "நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசு குறித்து கண்காணிக்க மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தினமும் கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

இதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறையும், மாசு குறித்து இரவு பகலாக 24 மணி நேரமும் எல்லா நாட்களும் கண்காணிக்கும். வெளிநாடுகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுச்சூழலை மிகவும் மாசுப்படுத்தி விட்டனர். ஆனால் அவர்கள் நம் நாட்டுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இது ஏற்புடையதல்ல.

கங்கை நதி

நமது நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கங்கை நதியை துய்மைப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இது ஒரு சவாலான பணியாகும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தேசிய அளவில் 8 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கதிர்வீச்சு காரணமா?

அண்மையில் ஒடிசா மாநிலத்தில் வானத்தில் பறந்த காக்கைகள் திடீர், திடீரென இறந்து விழுந்தன. இதற்கு 'செல்போன் டவர் கதிர்வீச்சு காரணமா?' என்று தெரியவில்லை.

எனவே, இதுபற்றி சுற்றுச்சூழல் துறை ஆய்வு நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தருமாறு கேட்டு இருக்கிறேன். இதேபோல், தொலைதொடர்புத்துறையும் கண்காணித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இதற்காக அந்த துறைக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலைகளிலும் மாசு வெளியாவதை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் துறை தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தொழில் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருமுறை தங்கள் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, தங்கள் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எவ்வளவு செலவழித்துள்ளது? என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்பதையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்பது கம்பெனி சட்டத்தின்கீழ் வரவேண்டும் என்று கேட்டு மத்திய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்," என்றார்

No comments:

Post a Comment