Islamic Widget

February 18, 2012

முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சரண்!


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சரண்பரங்கிப்பேட்டை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட அளவு வாகனங்களை விட கூடுதலாக சென்றதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மீது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் அவர் ஆஜராகாததால் ஜாமீனில் வெளி வர முடியாத பிடி வாரண்ட் அவர் மீது பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் பதவி காலியாக இருப்பதால், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்-2 முன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று காலை ஆஜராகி, ஜாமீன் பெற்றார்.
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் கடலூர் சிவராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "இந்த வழக்கு போடப்பட்டதே எனக்கு தெரியாது. பின்னர் தி.மு.க.வழக்கறிஞர்கள் மூலமாகவே தெரிய வந்தது. எனக்கு சம்மன் கிடைக்கவில்லை, இதற்கு காரணம் காவல்துறையா அல்லது மற்றவர்களா? என்று எனக்கு தெரியவில்லை.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சரண்தமிழக அரசு ரவுடிகளையும், கொள்ளையர்களையும் கட்டுப்படுத்த தவறி விட்டது. தி.மு.க.வினர்களை கண்காணிப்பதே காவல்துறையின் வேலையாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து இருக்கிறது.

தானே புயல் நிவராணம் மக்களுக்கு கிடக்கவில்லை. அ.தி.மு.க.வினர்களுக்கு வந்துவிட்டது. தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. கடலூர் மருத்துவமனையை தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றி அமைத்தோம். ஆனால் இப்போது அம்மருத்துவமனையின் நிலை சிறப்பாக இல்லை" என்றார்.

முன்னதாக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, அவருடன் சிதம்பரம் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள், முத்து-பெருமாள், ஜெயராமன், மாமல்லன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், பரங்கிப்பேட்டை நகர செயலாளர் பாண்டியன், மாமுன் அலி மாலிமார், அஜீஸ், வேலவன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் நீதிமன்றம் முன்பு குழுமி இருந்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது.

 

No comments:

Post a Comment