ரியாத்: சவூதி தலைநகர் ரியாதில் இன்று மாலை 3. 30 மணி முதல் கடுமையான புழுதிக்காற்று வீசத்தொடங்கியது காற்று வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் ரியாத் முழுவதும் இருட்டில் மூழ்கி புழுதி மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது.
இதனால் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கடைகள் நடத்துபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்கள் முன் செல்லும் கார்கள் புலப்படாத அளவுக்கு புழுதி அடர்த்தியாக காட்சியளிக்கிறது. மக்கள் புழுதிகாற்றிலிருந்து தங்களை பாதுகாக்க முகத்தில் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள்.
இது போன்ற புழுதிப்புயல் வீசும் போது ஆஸ்துமா போன்ற மூச்சிறைப்பு நோய் உள்ளவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தை தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment