Islamic Widget

January 31, 2012

அதிரடி திருப்பம்: ஜமாஅத் தலைவராகிறார் டாக்டர் நூர் முஹம்மது?!


யாரும் எதிர்த்து போட்டியிடவில்லை!  மாற்று வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்ப்பு!
பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று டாக்டர் நூர் முஹம்மது தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கலிக்குஜ் ஜமானும் வேட்புமனு அளித்தார். இந்நிலையில் கடைசி நாளான இன்று பி. ஹமீது கவுஸ் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில்,

கடைசி நேரம் வரை யாரும் மனுதாக்கல் செய்யாததினால் போட்டியின்றி டாக்டர் நூர் முஹம்மது தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாற்று வேட்பாளராக களத்தில் இருக்கும் கலிக்குஜ் ஜமான் தனது வேட்புமனுவை திருப்ப் பெற்றால் டாக்டர் நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இன்று காலையிலிருந்மே தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், மாலை 3 மணி வரை வேட்புமனு செய்ய யாரும் வராததினால் சரியாக 3.01-க்கு தேர்தல் அலுவலகம் மூடப்பட்டது.


நன்றி:mypno

1 comment:

  1. இன்ஷா அல்லா கண்டிப்பாக டாக்டர் நூர் முஹம்மது அவர்கள் தான் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete