Islamic Widget

September 12, 2011

மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் வழங்கும் விழா!

தூத்துக்குடியில் 15ம் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் 1200 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மற்றும் 100 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது" என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஸ்குமார் பேட்டியில் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனுநீதிநாள் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஸ்குமார் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அதன்பின் இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகையாக தலா ரூ.1000 வீதம் 15 பேருக்கும், முதியோர் உதவித் தொகையாக தலா ரூ.1000 வீதம் 40 பேருக்கும் வழங்கும் ஆணையை வழங்கினார். மேலும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து பொறியியல் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் 3 பேருக்குத் தலா ரூ.25 ஆயிரமும் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த 4 பேருக்குத் தலா ரூ.12,500 வீதமும், திருமண உதவித் தொகையாக 2 பேருக்குத் தலா ரூ.3 ஆயிரமும் வழங்கினார்.


அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஸ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

"தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் முதற்கட்டமாக 1200 பயனாளிகளுக்கு வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதலில் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2011-2012ம் ஆண்டு 59 ஆயிரம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா 15ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். இதுபோல் 100 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் இதேவிழாவில் வழங்கப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2011-2012ம் ஆண்டு 13 ஆயிரத்து 611 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்களைத் தூர் வாரும் பணிகள் நடந்து வருகின்றன. 45 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளது. இதிலுள்ள மணல்களை அள்ளிச் செல்ல உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் விடப்பட்டு வடகால், தென்காலில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் உண்மை நிலை விவசாயிகளுக்கு ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் அரசியல் ஆக்கி தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
தூத்துக்குடியில் விசை படகு மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சமாதான கூட்டம் நடத்தப்படும்"
என்று கூறினார்.

No comments:

Post a Comment