பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கடலில் மீன் கிடைக்காததால் வெளிமாநிலங்களுக்கு கடந்த 20 நாட்களாக மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, வேலிங்கராயன்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்துவாரம் வழியாக படகில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்திற்குப் பிறகு பரங்கிப்பேட்டை கடலில் அதிக அளவில் மீன் கிடைத்து வந்தது.இதனால் அன்னங்கோயில் பகுதியில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தினமும் 100 டன் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இந்த ஆண்டு குறைந்த அளவே மீன் கிடைப்பதால் கடந்த 20 நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீன் வியாபாரிகள், மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு சிலர் சுறுக்கு வலையை பயன்படுத்தி சிறிய மீன்களை பிடிப்பதால் மீன் பெருக்கம் இல்லாமல் போய் விட்டது. சுறுக்கு வலை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று மீனவர்கள் கூறினர்.
July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய திட்டமா? டெல்லியில் திருமாவளவன் பேட்டி
- குவைத்தில் உடனடியாக Safety Officer தேவை
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்?
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
- ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை
No comments:
Post a Comment