Islamic Widget

July 23, 2011

நார்வேயில் பயங்கரம்: 91 பேர் பலி!

 நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நேற்று மதியம் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்புர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் ஓஸ்லோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானதாக ஆரம்பத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் குண்டுவெடிப்பில் பிரதமர் அலுவலகம் பாதிக்குமேல் சேதமடைந்தது.
 குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் அங்கு பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.



                           
                                                                 நன்றி: RTNews


இதைத்தொடர்ந்து, நோர்வே ஆளுங்கட்சி சார்பில் ஆஸ்லோவின் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் பாசறை கூட்டத்தில் அடுத்த சில மணிநேரங்களில் மர்ம மனிதன் ஒருவன் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், 13 பேர் கொல்லப்பட்டதாக ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவித்தன. இச்சம்பவத்தின்போது கூட்டத்திலிருந்தோர் துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பிக்க, கடலில் குதித்தனர். இருப்பினும் துப்பாக்கியால் சுட்டவன் தொடர்ந்து கடலில் குதித்தவர்களை நோக்கியும் சுட்டான். இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சிய நிலையில், தற்போது கடலில் எண்ணற்ற சடலங்கள் மிதக்க ஆரம்பித்துள்ளன. இதுவரையில் மீட்கப்பட்ட சடலங்களின் கணக்கில் இரு சம்பவங்களிலுமாக 9 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் கலந்துகொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.துப்பாக்கியால் சுட்ட 32 வயது மதிக்கத்தக்க இளைஞனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவன் தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது. கூட்டத்தினுள் காவல்துறை சீருடையில் புகுந்த அவன், முன்னர் நடந்த குண்டுவெடிப்பைக்கூறி சோதனை நடத்த வந்துள்ளதாக அனைவரையும் சுற்றி நிற்கவைத்துள்ளான். அதன்பின்னர் திடீரென அவன் சுடத்துவங்கியதும் கூட்டத்திலிருந்தவர்கள் அருகிலுள்ள கடலில் குதித்து தற்காத்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.அமைதிக்குப் பெயர்பெற்ற நார்வே நாட்டின் தலைநகரில் நடந்துள்ள இந்த அசம்பாவித சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


                                             

No comments:

Post a Comment