புவனகிரி புவனகிரியில் கட்டி முடிக்காத புதிய அலுவலக கட்டடத்தில் கூட்டம் நடத்த பேரூராட்சி தலைவர் வலியுறுத்தியும், செயல் அலுவலர் காலவரையின்றி ஒத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புவனகிரி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் அஞ்சலைதேவி தலைமையில் வழக்கம்போல் பழைய அலுவலகத்தில் நடந்தது. வார்டு கவுன்சிலர்கள் உஷாராணி, அருண்குமார் தவிர மொத்தம் 16 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேரூராட்சித் தலைவர் அஞ்சலைதேவி, இந்த கூட்டத்தை புதிய அலுவலக கட்டடத்தில் நடத்தலாமே என கூறினார். அவருக்கு ஆதரவாக தி.மு.க.,- காங்.,-பா.ம.க.,-வி.சி.,- ம.தி.மு.க., வை சேர்ந்த கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர். இதனை எதிர்த்து பேரூராட்சி துணைத் தலைவர் ராம்குமார் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சரஸ்வதி, பழனியப்பன், வள்ளி, பாமா, அன்பழகன், கம்யூ., மணவாளன் உள்ளிட்ட ஏழு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் பணிகள் முழுமை பெறாத புதிய அலுவலக கட்டடத்தில் பணிகள் முடிந்த பிறகு கூட்டத்தை நடத்தலாம் என கூறி செயல் அலுவலர் பன்னீர்செல்வம் கூட்டத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment