சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ் விபத்திற்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்ததில் 21 பயணிகள் உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே இந்நேரத்தில் வெளியாகியுள்ளது.சென்னையிலிருந்து நேற்று திங்கட்கிழமை இரவு 08:25 மணிக்கு, கே.பி.என். தனியார் சொகுசு பேருந்து ஒன்று பொள்ளாச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. இது பயணிகள் சொகுசாக தூங்குவதற்கு ஏற்ப இருக்கைகளைக் கொண்டுள்ளது.
இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத தருணத்தில் பெரும் விபத்திற்குள்ளாகியுள்ளது.அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போய்க்கொண்டிருந்தபோது, எதிரே செல்லும் லாரியை முந்திச்செல்வதற்காக ஓட்டுநர் முயற்சித்துள்ளார். முதலில் இடது பக்கமாக ஒதுங்கி வழி கொடுத்த லாரி, சடாரென வலது பக்கமாக திரும்பியுள்ளது. லாரியுடன் ஏற்படவிருந்த மோதலை தவிர்ப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை வலதுபுறம் திருப்பியுள்ளார். வேகமாக ஓடிக்கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி, சாலையிலிருந்து இறங்கி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.கவிழ்ந்த வேகத்தில் டீசல் டேங்க் உடைந்து பேருந்து தீப்பற்றிக்கொண்டது. தீ மளமளவென்று பேருந்து முழுதும் பரவியுள்ளது. பயணிகள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததாலும், ஒரே ஒரு வாசல் மட்டுமே ஏறி, இறங்க இருந்ததாலும், சுற்றிலும் தீப்பிழம்பாக இருந்ததாலும் பயணிகளால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.இரவு நேரம் என்பதால் எந்த உதவியும் அவர்களுக்கு கிடைக்க வாய்பில்லாமல் போய்விட்டது. இக்கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகி உள்ளனர்.உயிரிழந்த 21 பேரின் உடல்கள் அருகிலுள்ள வாலாஜா மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனக்காக பினனர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் 4 பேர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.இப்விபத்தில் அதிர்ஷ்டவசமாக சென்னை முகப்பேர் கார்த்திக் ராஜா என்பவர் உயிர் பிழைத்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அவரது மனைவியை மீட்க முடியாமல் போய்விடதே என்று கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்.ச்ம்பவ இடத்திற்கு அமைச்சர் சின்னையா நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்த 21 பேருக்கும் இன்று தமிழக சட்டப்பேரவையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment