Islamic Widget

May 05, 2011

ஓட்டு எண்ணும் நாளில் மதுபான கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர்

கடலூர் : தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் 13ம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் ஓட்டு எண்ணும் நாளான வரும் 13ம் தேதி காலை முதல் நள்ளிரவு முழுவதும் மதுபான கடைகளை மூட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் 13ம் தேதி அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். வரும் 13ம் தேதி அன்று மதுபான கடைகளும், பார்களும், மது அருந்தும் இடங்களும் ஓட்டல் பார்களும், திறக்காமலும், விற்பனை செய்யாமல் இருப்பதை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டல், பார் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி யாரேனும் மதுபானம் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ, மேற்பார்வையாளர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment