தமிழக தேர்தல் நிலைபாடு குறித்து ததஜ அவசர பொதுக்குழு கூடி சில தீர்மானத்தை எடுத்துள்ளனர். இதில் முற்றிலும் முஸ்லிம்கள் என்ற முன்னுரிமை பின்னுக்கு தள்ளப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில்தான் முடிவு எடுத்து, தங்களை சமுதாய சிந்தனையில் இருந்து சற்று தள்ளி வைத்துள்ளனர். அது தொடர்பாக சில சந்தேகங்களையும், கவலையையும் நாம் பகிர்ந்து கொள்வோம்!.
தமிழகத்தை பொறுத்தவரையில் இடஒதுக்கீடு என்பது கடந்த தேர்தலைப் போல், தற்போது தமிழக முஸ்லிம்களின் முக்கியக் கோரிக்கை கிடையாது!. ஏனெனில் கடந்த தேர்தலில், இல்லாத ஒன்றிர்க்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அதை கேட்டுப்பெற்றோம். குழந்தை இல்லாதவர்களுக்கு முதல் குழந்தை பெறும்வரை தான் பிரச்சனை. முதல் குழந்தையை பெற்றுவிட்டால், அடுத்த குழந்தைக்கு அதிக சிரமம் இருக்காது என்பது பொது கருத்து!. அதே போன்றுதான், தற்போது இருக்கும் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தைத்தான் நாம் உயர்த்த கோருகின்றோம். இது யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சாத்தியமான ஒன்றுதான்!.
ஏனெனில் நாம் பெற்று இருக்க கூடியது உள் ஒதுக்கீடேயாகும். தனி ஒதுக்கீடு அல்ல!. எனவே தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அளவிற்கும் நிலையிலும் அந்த கோரிக்கை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதில் உள்ள குறைபாடுகளை களைய அரசே ஒரு கமிட்டியும் அமைத்து அதை ஆராய்ந்தும் வருகின்றது.
தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று எந்த கட்சிகளும் நினைப்பதில்லை!. அது அவர்களாலும் முடியாது என்று அவர்களுக்கே தெரியும். ஆனால் எதையுமே எழுத்து பூர்வமாக கோரி பெறும் ததஜ இந்த முறை, திமுக தேர்தல் அறிக்கையில் “இடஓதுக்கீட்டின் அளவை உயர்த்த பரிசீலிக்கப்படும்” என்ற வார்த்தையில் மட்டுமே மயங்கியது ஏன்?. மேலும் இதே தி.மு.க தானே தற்போது ஆட்சியிலும் உள்ளது. கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று விட்டுச்சென்றதும், அதை அன்றே முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்க முடியும்!. ஆனால் செய்யவில்லை!!.
எனவே, இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கைக்காக, சமுதாய ஓட்டுக்கள் அனைத்தையும் தாரை வார்க்க வேண்டாமே!. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் திமுக தான் நமக்கு முன்னுரிமை கொடுத்து அதை நிறைவேற்றிய கட்சி. அந்த வகையில் நாம் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்!. எனவே நம் சமுதாய வேட்பாளருக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மீதம் இருக்கும் இடங்களில் இவர்களை ஆதரித்து இருக்கலாமே!.
அதே சமயம் தி.மு.க மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கின்றது. இவர்களின் உறுப்பினர்கள் மந்திரியாக இருக்கின்றார்கள். அவ்வாறு இருந்தும் இதுவரை மத்தியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் திமுக வலிமையாக நடந்தது கிடையாது. அதை வலியுறுத்தி ததஜ கோரிக்கையை முன் வைத்திருக்கலாம்!.
மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரித்தல் என்பதற்கு பதில், மத்தியில் இட ஒதுக்கீட்டை அளிக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன்களின் அறிக்கை வெளிவந்தும், அதை அமல்படுத்தாத மத்திய அரசிற்கு, தி.மு.க கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ததஜ வைத்திருந்தால் அது மிக வலிமையாக இருந்திருக்கும்.
அப்படி ஒரு கோரிக்கையை வைக்காமல், மத்தியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை தராமல், காலம் கடத்தும் காங்கிரசிற்கும் சேர்த்தே தங்களின் ஆதரவு என்று ததஜ முடிவு எடுத்திருப்பது இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடாகும்!. சேலம் பொதுக்குழுவில் பாபரி பள்ளி இடிப்பு, மத்தியில் இட ஒதுக்கீட்டு துரோகம், புதுவை காங்கிரஸ் இட ஒதுக்கீட்டு துரோகம், என்று பட்டியலிட்டு, காங்கிரசிற்கு எதிர்ப்பு என்ற நிலையை எடுத்துவிட்டு சென்னை பொதுக்குழுவில் ஆதரவு என்ற நிலை என்பது முரண்பாடல்லவா?. இரட்டை வேடமல்லவா?.
இவர்கள் ஜூலையில் மிகப்பெரிய பேரணியும் கூட்டமும் நடத்திய கையோடு பிரதமர், சோனியா உள்ளிட்டோரையும் சந்தித்து, இந்த கோரிக்கையை வலியுறுத்திய பின்னும், இன்னும் காங்கிரஸ் மவுனம் காக்கின்றது. ஆனால் இவர்களுக்கும் சேர்த்தே எங்கள் ஆதரவு என்பது எதனால்?. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க அணைத்து முயற்சியையும் செய்வோம் என்ற கோஷம் என்னானது?. முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டும்தான் இந்த பிடிவாதமா?. இது உங்களை நம்பி வந்த லட்சோப இலட்சம் முஸ்லிம்களை ஏமாற்றுவது போல் இல்லையா?. இனி இதுபோல் ஒரு கோரிக்கையை வைத்தால் முஸ்லிம்கள் உங்கள் பின்னால் அணிவகுப்பார்களா?. ததஜ உறுப்பினர்களே இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அடுத்ததாக ததஜ கூறி இருக்கும் காரணம், அதிக அளவில் சமுதாய வேட்பாளர்களை அ.தி.மு.க களம் இறக்கவில்லை என்பதாகும். இது நூற்றுக்கு நூறு உண்மையே. இதே கவலை நமக்கும் உண்டு. இதில் நாமும் உடன்படுகின்றோம். ததஜ விற்கு அதிக அளவில் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கவலையும் அக்கறையும் இருகின்றது என்பதை அதிமுக அதிக அளவில் முஸ்லிம்களை நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் இருந்து நமக்கு தெரிய வருகின்றது.
அதே சமயம், நீங்கள் ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ள திமுக கூட்டணியில் உள்ள பா.ம.க, தங்களுக்கு 30 தொகுதி ஒதுக்கியும், அதில் ஒன்று கூட முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கவில்லையே!. முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தாத அவர்களுக்கும் சேர்த்தே, உங்களின் தேர்தல் ஆதரவு என்ற நிலைப்பாடு, இரட்டை வேடமா இல்லையா?. களத்தில் இருக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை விட முஸ்லிமல்லாத வேட்பாளர்கள் உங்களுக்கு முன்னுரிமையாக படுகின்றதா?.
பா.ம.க ஒரு சீட்டைக்கூட முஸ்லிமுக்கு ஒதுக்காததை எதிர்க்காமல், அதை ஆதரித்து பேசியுள்ள பி.ஜெ யின் செயல் கண்டிக்கத்தக்கது. வன்னியன் ஓட்டு அந்நியனுக்கு இல்லை என்ற வன்னியன் ராமதாசுக்கு, பி.ஜெ அவர்கள், அந்நியனான முஸ்லிமின் ஓட்டு, வன்னியனுக்கு இல்லை என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்!. இராமதாசுக்கு இருக்கும் இன உணர்வு கூட இந்த பி.ஜெ க்கு இல்லாதது ஏன்?. இதே ராமதாசின் தைலாபுரத்தின் தோட்டத்திற்கு சென்று, இன உணர்வை எப்படி வளர்ப்பது என்று பிஜே பாடம் படிக்கட்டும்!. இது அடுத்த தேர்தலிலாவது அவருக்கு உதவியாக இருக்கும்!.
பாமக வன்னியர்க்ளுக்கான கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் தலித்களுக்கான கட்சியே!. அவர்களுக்கு ஒதுக்கிய பத்து தொகுதிகளில், இரண்டு மட்டுமே பொது தொகுதிகள். அதில் ஒன்றை முஸ்லிம்களுக்காக ஒதுக்கும் போது (இது முஸ்லிம்களுக்காக அவர்கள் ஒதுக்கி இருப்பது 50% ஆகும்!.) பாமக ஏன் ஒன்றை கூட ஒதுக்கவில்லை?. திமுக அதிமுக காங்கிரஸ் ஆகியன முஸ்லிம்களின் கட்சியா? எந்த உரிமையுடன் இந்த கட்சியில் நீங்கள் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்பார்க்கின்றீர்களோ, அதே உரிமையுடன் தான் பாமக விடமும் நாம் எதிர்பார்க்க வேண்டும்!.
பாமக விடம் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்பாப்பது தவறு என்றால், அதேபோல் ஜெயலலிதாவிடமிருந்து முஸ்லிம்களுக்கு சலுகைகளை எதிர்பார்ப்பதே மடத்தனமான ஒன்று!. இதற்க்கு கடந்த கால வரலாறுகளே நமக்கு படிப்பினையாகும்!.
குறைந்தபட்சம், த.மு.மு.க மேல் உள்ள உங்களின் வறட்டு பிடிவாதத்தினாலும், போலி கவுரவத்திற்க்காகவும், ம.ம.க வேட்பாளர்களையாவது தவிர்த்து, மற்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு என்ற நிலைபாட்டையாவது எடுத்திருக்கலாம்!. அதுவே ததஜ, ம.ம.க. விற்கு மட்டுமே எதிரி (?) என்ற உங்களின் நிலைபாட்டை நாங்கள் நம்பும்படி இருந்திருக்கும்!.
அதுமட்டுமல்லாமல், நிர்வாகிகளுக்கெல்லாம் வேலை இருப்பதால் இவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லமாட்டார்களாம்!. அதனால் (வேலை வெட்டியில்லாத) தொண்டர்களை மட்டும், வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டால் களப்பணி ஆற்றுங்கள் என்ற ஒரு அறிவுரையையும் வழங்கியிருகின்றார்கள். இதைவிட தன் தொண்டர்களை ஒரு இயக்கம் அசிங்கப்படுத்தி இருக்க முடியாது!. ததஜ வின் பெயரையும், கொடி(துணி)யைக்கூட பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்ட இயக்கம், அதனை விட மேன்மையான தொண்டனை மட்டும் பயன்படுத்த அனுமதித்தது நகைப்பிற்குரியது!.
http://adiraimujeeb.blogspot.com/2011/03/blog-post_27.html
ஆக்கம் : அதிரை முஜீப்.
தகவல் அதிரை அமீன்.
நன்றி: intj photos: tntjpno

//திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது//.
ReplyDeleteதி.மு.க-வை ஆதரிப்பது உங்கள் இஷ்டப்படியே ஓ.கே-ன்னு வெச்சிக்குவோம், ஆனால் தனது 30 தொகுதியில் ஒன்றில் கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டு போட சொல்றிங்களே அது என்ன நியாயம்.
"வன்னியன் ஓட்டு அந்நியனுக்கு இல்லை என்று சொன்ன மரம் வெட்டி ராமதாஸுவை பார்த்து "பாய் ஓட்டு நாய்-க்கு இல்லை என்று சொல்ல வேண்டியது தானே
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்தது போல,சஹாபாக்களையும் நபிமார்களையும் குறை கூறி,தன் சுய கருத்தை குர்ஆனில் புகுத்திய இஸ்லாமிய எதிரிகளின் கை கூலி இஸ்லாத்தின் துரோகி மரண தண்டனை கைதி பி.ஜே(துரோகி இருக்கும் நிலையில் மஹதி-அலை- வந்துவிட்டால் இவன் தலை உருட்டப்படும்). இவரை வணகும் கூட்டத்தின் பெயர் தான் த.த.ஜ.
ReplyDelete