Islamic Widget

March 29, 2011

பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக, சிதம்பரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன், ரோசாரி ஆகியோர் விழா நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்தனர். பணம் மற்றும் பொருள் பட்டுவாடா எதுவும் நடக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


source:dinamalar

No comments:

Post a Comment