Islamic Widget

March 29, 2011

என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?

செல்வி ராமஜெயம் - புவனகிரி

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களும், அதிக பரப்பளவும் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. கிழக்கே சிதம்பரம், மேற்கே விருத்தாசலம், தெற்கே காட்டுமன்னார்கோவில், வடக்கே குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
2006 தேர்தலில் புவனகிரி எம்.எல்.ஏ.வாக அதிமுக கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்விராமஜெயம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை விட 14,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இத்தேர்தலில் (2011) பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை எதிர்த்து களம் காண்கிறார்.கடும் போட்டி: தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவில் பெரும் பணிகள் மேற்கொள்ளாவிடினும் தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவர் மீது கட்சியினரிடமும், மக்களிடமும் அதிருப்தி இல்லை.இருப்பினும் தற்போது சீரமைக்கப்பட்ட தொகுதியில் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சிதம்பரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டதால் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதனைகள்: ""தொகுதி பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் பல முறை பேசியும் எதிர்கட்சி தொகுதி என்பதால் பெரிய அளவில் திட்டங்களை கொண்டு வர முடியவில்லை'' என்று கூறும் செல்வி ராமஜெயம், ""தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிராமங்களுக்கு சாலை, மயானக் கொட்டகை, பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று பார்வையிட்டு நிவாரணம் மேற்கொண்டது, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்காக போராடி ஏக்கருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தது ஆகியவை எனது சாதனைகள்'' என்கிறார் செல்வி ராமஜெயம்.பிரசாரம்: பரங்கிப்பேட்டை ஒன்றிய பேரூராட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் இவர், திமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய பிரச்னைகளை பேசி பிரசாரம் செய்து வருகிறார்.

பலம்

தொகுதியில் தங்கி தனது மேம்பாட்டு நிதியிலிருந்து
பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொண்டது. மழை,
வெள்ளத்தின் போது மக்களை சந்தித்தது, கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தது. அவர்களது இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உள்ளிட்டவை.

பலவீனம்

தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவில் மிகப் பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை என்பது பலவீனம்.

5 comments:

  1. அன்பு நண்பா இஸ்மாயில் ,

    சற்று 5 வருடம் முன்பு flashback செய்து பார்க்கவும்,
    இந்த அம்மா வருவதற்குமுன் , ரோட்டில் நடக்ககுட கஷ்டமா இருக்கும், அவளவு குண்டு குழி,நீங்க சொல்லலாம் போன ஆட்சியுளும் தான் ரோடு போடங்கனூ, அந்த ரோடு எப்படி இருந்ததுன்னு உங்களுக்கும் தெரியும்னு நினைகிறேன்...

    ReplyDelete
  2. செல்வி. ராமஜெயம் அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முழு காரணம் பரங்கிப்பேட்டையும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் தான். என்ன இருந்தாலும் நம்ம ஊரை சார்ந்த சகோதரி இந்த முறை வெற்றி இலக்கை அடைய கொஞ்சம் போராட வேண்டியது தான்...
    இருந்தாலும் நாம் நமக்கு அறிந்த நம் சகோதரியின் தொகுதி சகோதரர்களுக்கு வேண்டும் என்றால் நாம் தெரிய படுத்தலாம் அவரின் வெற்றிக்காக உழைபதற்கு. இபோ மக்கள் கட்சியை பார்க்க வில்லை வேட்பாளர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று தான் பார்கிறார்கள் என் கண்ணோட்டத்தில் ........

    யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை நடந்தால் அது போதும்!!!!!!!!!!!!!!!!!!

    அன்புடன்..
    மீ.மெ. ஹஜஹா கமால்

    ReplyDelete
  3. அன்புடன்..
    மீ.மெ. ஹாஜாஹ் கமால்

    ReplyDelete
  4. அன்பு சகோதர்களே
    இன்ஷா அல்லா நாம் சகோதரி செல்வி ராமஜெயம் அவர்களை ஆதரிப்போம் ஏன் என்றால் அவர்கள் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவராக இருதபோது அவர் சாதாரண ஆட்டோ வில் தான் வருவார்கள் இப்போது இருக்கும் நமது தலைவர் போல் Scorpio car இல் வரவில்லை. இப்போது இருக்கும் நமது தலைவர் போல் உதவி கேட்டுவரும் நமது சகோதர சகோதரிகளிடம் ஏத்த ஒரு "இழிவான" வார்தும் பேசியது இல்லை.

    ReplyDelete
  5. assalamu alaikkum appadiya seygirar avar yosikka vachitingale...

    ReplyDelete