Islamic Widget

March 29, 2011

புவனகிரி வெள்ளாற்றில் கடல் நீரை தடுக்க நடவடிக்கை :அடித்து சொல்கிறார் அ.தி.மு.க., செல்வி ராமஜெயம்

சேத்தியாத்தோப்பு : ""வெள்ளாற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்'' என புவனகிரி தொகுதி அ.தி. மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயம் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:நான் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., அரசு எனது கோரிக்கையை எதையும் நிறைவேற்றாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது.
சேத்தியாத்தோப்பில் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் துவங்கப்பட்ட பால் குளிரூட்டு நிலையத்தை மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. என்னை வெற்றி பெறச் செய்தால், பால் குளிரூட்டு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவேன்.சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். திட்டமிட்டு நிறுத்தி வைத்துள்ள சேத்தியாத்தோப்பு எத்தனால் தொழிற்சாலை அமையவும், காதி ஆலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.டி.பவழங்குடி - புத்தூர் இடையே புதிய பாலம், சேத்தியாத்தோப்பு - சத்திவிளாகம் இடையே தரைப் பாலம் அமைக்கவும், வெள்ளத் தடுப்பு அணைகள் கட்டவும், கடல் நீர் ஆற்றில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்.இத்தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் கிராம மேம்பாட்டு திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். என்.எல்.சி., க்கு நிலம், மனை கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவேன்.சேத்தியாத்தோப்பை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்.

Source: Dinamalar

No comments:

Post a Comment