Islamic Widget

March 29, 2011

கடலூர் மாவட்டத்தில் மனு பரிசீலனை 27 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பாளர்களின் மனு பரிசீலனையில் 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த மனுத் தாக்கலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 117 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நேற்று அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடந்தது.இதில் கடலூரில் அ.தி.முக., மாற்று குமரன், குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., மாற்று ராமலிங்கம், அ.தி.மு.க., மாற்று பழனிசாமி, லோக் ஜனசக்தி ராதாகிருஷ்ணன், பண்ருட்டியில் தி.மு.க., மாற்று அங்கயற்கண்ணி, தே.மு.தி.க., மாற்று அறிவொளி, திட்டக்குடி(தனி)யில் ஜார்கண்ட்முக்தி மோட்சா இளங்கோவன், சுயேட்சை செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் நளினி, புவனகிரியில் பா.ம.க., மாற்று ராஜேந்திரன், அ.தி.மு.க., மாற்று இளஞ்செழியன், சுயேச்சைகள் அன்பழகன், ஆளவந்தார், விருத்தாசலம் தொகுதியில் காங்., மாற்று இளையராஜா, தே.மு.தி.க., மாற்று நித்யா, ராஷ்டீரிய ஜனதாளம் சக்திவேல், சுயேச்சைகள் தாராசிங், கலைமன்னன், பெரியசாமி, சிதம்பரம் தொகுதியில் ஜார்கண்ட் முக்திமோட்சா கோவிந்தசாமி, ராஷ்டீரிய ஜனதாதளம் சண்முகம், சுயேச்சைகள் ஜெயக்குமார், கவிதா, சண்முகம், நெய்வேலி தொகுதியில் பா.ம.க., மாற்று காயத்ரி, அ.தி.மு.க., மாற்று சுமதி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நெய்வேலி சுயேச்சை பாண்டியனின் மனு மீண்டும் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.கடலூரில் 7, பண்ருட்டி 11, குறிஞ்சிப்பாடி 5, நெய்வேலி 8, விருத்தாசலம் 9, திட்டக்குடி 11, புவனகிரி 17, சிதம்பரம் 12, காட்டுமன்னார்கோவில் (தனி) 9 என மொத்தம் 89 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


Source: Dinamalar

No comments:

Post a Comment