அ தி மு க கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் கடந்த புதன்கிழமை 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்து மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசித்தனர். ஆனால் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை ஒத்திவைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் அதிமுக தலைவி ஜெயலலிதா
அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையாத நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. எனவே புதிய வேட்பாளர் பட்டியல் மார்ச் 21-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
அவர் தனது அறிவிப்பில்
அதுவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் யாரும் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். புதிய வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 24-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்

No comments:
Post a Comment