Islamic Widget

March 24, 2011

ஹஜ் கமிட்டி சார்பில் இந்தியா-சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம்

சென்னை, மார்ச்.24-இந்தியா-சவுதி இடையே 26-ந் தேதி ஒப்பந்தம் ஏற்படுகிறது என்றும், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகள் அதிகமாக சவுதி அரேபியா செல்ல அந்த நாட்டு அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் கூறினார்.
இது குறித்து அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கூறியதாவது:-

ஒப்பந்தம்

ஹஜ் 2011-க்கான `இண்டோ சவுதி ஒப்பந்தம் கையெழுத்து வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) சவுதி அரேபியா ஜித்தாநகரில் நடைபெற உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, சவுதி அரோபிய ஹஜ்க்கான மந்திரி பவுத்அல்பருதி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஹஜ் கமிட்டி சார்பில் நான் கையெழுத்திடுகிறேன்.இந்த ஒப்பந்தத்தின் போது மத்தியமந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவும், நானும் சவுதி அரசிடம் இந்தியாவுக்கு கூடுதலாக கோட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்.ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் அவர்களிடம் இது குறித்து வலியுறுத்துவோம்.

விமான நிலையங்கள்

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு புதிதாக 2 விமான நிலையங்கள் அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக தென்மாவட்டத்தில் மதுரை, வட நாட்டில் ராய்ப்பூர் ஆகிய விமானநிலையங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஹஜ் பயணிகள் பேக்கேஜ் கொண்டு செல்ல இந்தியா முழுவதும் சரியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment