கடலூர் : கடலூர் மாவட் டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை நேற்று கலெக்டர் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 9ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான துவக்க விழா நிகழ்ச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் சீத்தாராமன் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: இதற்கு முன்பு வீடுகள் கணக்கெடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தனி நபர் மற்றும் சமுதாயம், பொருளாதாரம் பற்றி முழுமையாக தெரிந்தால்தான் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட முடியும். மக்கள் தொகை கணக்கின்படி தான் நிதி ஒதுக்கீடு பெற முடியும்.இந்த கணக்கெடுப்பு படிவத்தில் 29 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மனமுறிவு, விவாகரத்து பெற்றவர்கள் போன்றவர்களுக்கு கூட தனியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் ஆண், பெண், தவிர திருநங்கையர்களுக்கும், காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 28.2.11 அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தெரு ஓரங்களில் சுற்றித் திரிபவர்கள், வீடற்றவர்கள் ஆகியோரை ஒரே நேரத்தில் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும்.இக்கணக்கெடுக்கும் பணிக்காக பணிக்கப்பட்டவர்களுக்கு அரை நாள் பணி செய்வதை முழு நாளாக கணக்கிடப்படும். கணக்கெடுப்பு பணியின்போது விடுபட்டவர்கள் 1.3.2011 முதல் 5.3.2011க்கு மறு பரிசீலனை செய்யப்படும். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்காக ஏற்கனவே இரண்டுமுறை பயிற்சி வழங்க வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக 3வது பயிற்சியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2011ம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இம் மாவட்டத்தில் 22,85,395 பேர் உள்ளனர். இப்பணிக்காக கடலூர் மாவட்டம் 4,334 தொகுப்பாக பிரிக்கப்பட்டு 4,037 பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். 659 கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிடுவர். எனவே கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கமிஷனர் இளங்கோ, பி.ஆர்.ஓ., முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment