கடலூர் : சமரச அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த ஏதுவாக பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு வரும் 11ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
பி.எஸ்.என்.எல்., கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட முதுநிலை பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., தொலைபேசியை பயன்படுத்தி கட்டண பாக்கி வைத்துள்ள கடலூர் பகுதி வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்த ஏதுவாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க வேண்டி பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்று நிலுவைத் தொகையை சமரச அடிப்படையில் செலுத்தலாம். நிலுவைத் தொகையை வசூலிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர்வதை தவிர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Source: Dinamalar
No comments:
Post a Comment