லால்பேட்டை:வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது.
வழக்கம்போல் நேற்று காலை கொடிக்காலுக்குச் சென்ற ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.
source: dinamalar

No comments:
Post a Comment