Islamic Widget

February 03, 2011

தாயகம் திரும்பும் எகிப்து பயணிகளிடம் வர்த்தக கட்டணம்: ஏர்-இந்தியா நிறுவனத்தின் பகல் கொள்ளைக்கு தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்


செ. ஹைதர் அலி வெளியிடும் கண்டன அறிக்கை:

எகிப்தில் ஆளும் அரசுக்கு எதிராக உள்நாட்டு புரட்சி வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எகிப்தில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானத்தில் கொண்டுவரப்படும் இந்தியப் பணிகளுக்கு இந்நிறுவனம் சாதாரண கட்டணம் வசூலிக்காமல் இருமடங்கு அதிகமுள்ள வர்த்தகக் கட்டணம் வசூலிக்கிறது. வேறு வழியில்லாமல் பயணிகளும் உயிருக்கு அஞ்சி, வர்த்தகக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. மேலும், கிரெடிட் கார்டுகளை மறுத்துவிட்டு, ரொக்கப் பணம் கட்டுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.1990ஆம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது குவைத்தில் தவித்த இந்தியப் பயணிகளை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அப்போது விமானத்தில் உள்ள இருக்கைகளை நீக்கிவிட்டு இந்தியப் பயணிகளை அதிகஅளவில் தாயகம் கொண்டுவர வி.பி.சிங் முயற்சி மேற்கொண்டார். அவரது உள்ளத்தில் வருமானத்தை விட நாட்டு மக்களின் உயிரே மேலோங்கியிருந்தது.ஆனால் இன்றைய மத்திய அரசோ, உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளிடம் கூடுமானவரை கொள்ளையடிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு எகிப்தில் உயிருக்கு அஞ்சி தாயகம் திரும்பும் பயணிகளிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் கட்டணம் வசூலிப்பதை தடுக்குமாறும், அதற்கான கட்டணத்தை மத்திய அரசே விமான நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment