Islamic Widget

January 09, 2011

குடும்ப அட்டை இணைப்புத் தாள் குறைவாக வழங்கப்பட்டதால் அவதி

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கான 2011-ம் ஆண்டு இணைப்புத் தாள் நியாய விலைக்கடைகளில் குறைந்த அளவிலான தாள்கள் வழங்கியதால் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாயினர். அதேபோல பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் ஊழியர்களும் சங்கடமடைந்தனர்.
ஒரு நியாயவிலைக் கடைக்கு 600 குடும்ப அட்டைகள் உள்ளது என்றால் ,400 இணைப்புத் தாள்கள்தான் வழங்கப்படுகிறது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

புவனகிரியில் சாலை மறியல்:

புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் இணைப்புத் தாள் வழங்கவில்லை. எனவே விடுபட்டவர்களுக்கு இணைப்புத்தாள் வழங்கவும், மாதத்தில் அனைத்து நாளும் நியாய விலை பொருள்கள் வழங்க வேண்டும் என புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புவனகிரி போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலை வாபஸ் பெற்றனர்.


Source: dinamani

No comments:

Post a Comment