சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.40 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சக செயலாளர் எஸ்.சுந்தரேசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டாலருக்கும் மேல் உயர்ந்து வருவதால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் விலை, இறக்குமதி விலையை விடக் குறைவாக விற்பனை செய்யப்படுவதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சமையல் எரிவாயு விலை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்று எஸ்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்
Source:.inneram
No comments:
Post a Comment