Islamic Widget

January 08, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரிந்த 62 பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன!

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித் திரிந்த 62 பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன.

சுற்றித்திரியும் பன்றிகள்:-

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறது.அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை சுட்டுக்கொல்ல மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டுகளில் சுற்றித்திரியும் பன்றிகளை சுட்டுக்கொல்ல பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ், செயல் அலுவலர் ஜீஜாபாய் ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்டன

இதன்படி நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரியும் 62 பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட பன்றிகளை ஊருக்கு வெளியே உள்ள திடலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.

Source: dailythanthi

1 comment:

  1. அரசியிலில் ஊழல் செய்யும் "பன்னி"களை என்னசெய்யலாம்?


    அப்ப "பன்னி" இல்லா பரங்கிப்பேட்டைனு சொல்லுங்க இஸ்மாயில் ?!

    ReplyDelete