Islamic Widget

January 25, 2011

ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்

மாஸ்கோ : உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியில் குண்டு வெடித்து குறைந்தது 31 நபர்கள் பலியானதாகவும் 130 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் கூறினர்.
ஆரம்ப கட்ட தகவல்களின் படி இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என கருதுவதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் நிருபர்களிடம் கூறினார். மேலும் தற்கொலை மனிதன் மூலம் குண்டு வெடித்திருக்கலாம் என ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.குண்டு வெடிப்பை தொடர்ந்து மாஸ்கோ முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டொமோடிடோவா மாஸ்கோவின் நவீன விமான நிலையமாய் இருந்த போதும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாய் இருந்ததில்லை. 2004-ல் இரு தற்கொலை படை மனிதர்கள் கள்ளத்தனமாய் விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணித்து 90 நபர்களுடன் விமானத்தை வெடிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

source: inneram

No comments:

Post a Comment