அல்லாஹ்வின் கிருப்பையால் 22.01.2011 அன்று (இன்ஷாஅல்லாஹ்) வருகின்ற ஜனவரி 27 சென்னையில் மற்றும் மதுரையில் அலகாபாத் (அ)நீதிமன்ற பாபரி மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்தும் மற்றும் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறுவிசாரனைக்கு உட்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெறுகின்ற "தமிழக முஸ்லிம்களின் மாபெரும் பேரணி & ஆர்பாட்டம்" ஏன்! எதற்கு? என்பதை விளக்கும் விதமாக பரங்கிப்பேட்டையின் முக்கிய தெருமுனைகளில் சூறாவளி பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்த சூறாவளி பிரச்சாரத்தில் மெளவி.ஷாஃபி மன்பஈ அவர்கள் இந்த "மாபெரும் பேரணி & ஆர்பாட்டம்" ஏன்! எதற்கு? மற்றும் போரட்டதில் ஏன்? கலந்துகொள்ள வேண்டும் என்று சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நகர தலைவர் முத்துராஜா,பொருளாளர் ஃபாஜல் உசேன்,செயலாளர் சுக்கூர்,து.செயலாளர் ஷாஹீல் (அப்துல்) ஹமீது மற்றும் ஏரளாமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!!
நன்றி tntjpno
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇந்த போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்!