11 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் ஓட்டல்கள் 31 ஆம் தேதி இரவு 1.30 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உரிமையாளர்களுடன் சென்னை மாநகர போலீஸ் ஆனையர் ராஜேந்திரன் நடத்திய சிறப்புக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசும்போது,பாதுகாப்பாக புத்தாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நட்சத்திர ஓட்டல் பிரதிநிதிகளோடு இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.புத்தாண்டு நிகழ்ச்சிகளை 31ந் தேதி இரவு 1.30 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நீச்சல் குளங்களை கண்டிப்பாக மூடிவிட வேண்டும். சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அந்தந்த பகுதி துணை போலீஸ் கமிஷனர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல் வளாகங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இளம்பெண்களுக்கு எதிராக ஈவ்டீசிங் பிரச்சனைகளின்போது ஓட்டல் உரிமையாளர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் உடனடியாக போலீசிடம் புகார் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பெண்களுக்குரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடவும் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலை தடுப்புகள் அமைக்கப்படும். கண்டிப்பாக பைக் ரேஸ் கூடாது. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.31 ஆம் தேதி மாலை முதல் சென்னை நகரில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்படும். 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாசநடனங்களை நடத்தக் கூடாது என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- தொடரும் கனமழை! புதுவை குளிர்பிரதேசமாக மாறியது!
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
No comments:
Post a Comment