தமிழகத்தில் சமீபகாலமாக பெய்துவரும் மழையின் காரணமாக பூண்டின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கூக்கல்தொரை, சோலூர் மட்டம், கட்டபெட்டு, கூக்கல், கக்குச்சி, மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு பயிர் அதிகமாக விளைவிக்கபடுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக பூண்டு விளைச்சலில் பாதி மழயில் நனைந்து அழுகிவிட்டது.
இந்நிலையில் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 300 ஆக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் அதிகபட்சமாக வெள்ளைப் பூண்டு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது 2 மடங்குக்கு மேல் விலை உயர்ந்திருப்பதால் சில்லரைக் கடைகளில் பூண்டு விற்பனை கணிசமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மளிகை கடைகளில் பூண்டு (சிறிய ரகம்) ரூ. 280க்கும், பெரிய ரகம் கிலோ ரூ. 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Source:.inneram
No comments:
Post a Comment