Islamic Widget

November 01, 2010

"ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு" - அப்துர் ரஹ்மான் M.P யுடன் ஒரு நேர்காணல்!

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னமும் முஸ்லிம்களின் இறையில்லமுமான பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞர்களாலேயே "கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு" என விமர்சிக்கப்பட்ட அலஹபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்து நாட்டின் சட்டத்தை உலக அரங்கில் நகைப்புக்கு உள்ளாக்கியிருந்த நிலையில், "பாபர் மஸ்ஜித் இடிப்பை இந்திய இறையாண்மையைத் தகர்த்த செயல்" என நாடாளுமன்றத்திலேயே துணிச்சலோடு எடுத்து வைத்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பி அவர்கள் சமீபத்தில் வளைகுடா சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


அவரின் கத்தர் வருகையின் போது, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் கத்தர் பிரதிநிதிகளில் சிலர், கடந்த 06/10/2010 அன்று மாலை நேர்காணல் செய்தனர். "சட்டத்துக்குப் புறம்பான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுக் கூறப்பட்ட பாபரி மஸ்ஜித் இடவழக்குத் தீர்ப்பு, இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம், சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் காரணிகள்" போன்ற விஷயங்கள் குறித்த சந்திப்பாக அது இருந்தது.
சுமார் 2 மணி நேரம் நீண்ட அந்த நேர்காணலில் சத்தியமார்க்கம்.காம் சார்பாக கேட்கப்பட்ட வினாக்களுக்குப் பொறுமையுடன் சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பி பதிலளித்தார். பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக அரசால் அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் கமிட்டி அறிக்கையின் மீதான நாடாளுமன்ற சர்ச்சையின் போது, "இந்திய இறையாண்மையைத் தகர்த்தச் செயல்" என்றும் "நாட்டுச் சட்டத்தின் மீது சிறுபான்மையினர்களின் நம்பிக்கையைச் சிதைத்தச் செயல்" என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்ததைத் தன் உரையின் போது சுட்டிக்காட்டிய அப்துர் ரஹ்மான் எம்.பி., அவ்வேளையில் எதிர்கட்சி தலைவராக அவையில் அத்வானி அமர்ந்திருந்த வேளையிலேயே மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளி அத்வானி தான் என துணிச்சலுடன் அவையில் பதிவு செய்திருந்தார். எம்.பி. அப்துர் ரஹ்மான் அவர்களின் அந்தப் பேச்சை, நாட்டில் பெரும்பான்மையான ஊடகங்கள் மறைந்திருந்தன. லிபர்ஹான் கமிசன் மீதான எம்.பி. அப்துர் ரஹ்மான் அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையினைக் கீழே காணலாம்.

 
 
ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தாலேயே அநியாயமான செயல் என வர்ணிக்கப்பட்டிருக்கும் பாபர் மஸ்ஜித் இடிப்புச் சம்பவம், இடிக்கப்பட்ட வேளையில் இந்நாட்டின் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்களால் மஸ்ஜித் இருந்த இடத்திலேயே திரும்பவும் கட்டி கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்க, இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் சட்டத்துக்குப் புறம்பாக நிலத்தை மூன்று கூறுகளாகப் பிரித்துக் கொடுத்த அலஹபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு, உலக அரங்கில் நாட்டிற்கு மீண்டுமொரு தலைகுனிவையே தந்துள்ளது.

இவ்விஷயத்தில் பாபரி நிலத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான், மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் முடிவை ஆதரித்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவார அமைப்புகள் செயல்பட்டிருந்த உண்மைகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் கூட, அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக சட்ட ரீதியான எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், பயங்கரவாதத்தின் பெயரால் இப்போதும் முஸ்லிம் சமுதாயம் வேட்டையாடப்படும் சூழலே நிலவும் நிலையைச் சுட்டிக்கேட்கப்பட்ட கேள்விக்கு, "குறைந்த பட்சம் அரசியல் ரீதியாகவாவது முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைவது மட்டுமே இது போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வாக இருக்க இயலும்" என்ற கருத்தினை உறுதியான குரலில் வெளிப்படுத்தினார்.
"இரத்தம் வழங்குவதல், மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள் முதலான சமுதாய நற்செயல்களுக்குப் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள் இருப்பதில் தவறில்லை. கருத்து முரண்பாடுகள் உள்ள அக்கீதா விஷயங்கள் மார்க்கத்தைப் பல்லாண்டுகள் படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஆலிம்களுக்கு இடையிலேயே சர்ச்சைக்குள்ளாக்கப்பட வேண்டிய அதே நேரத்தில், அரசியல்ரீதியாக ஒரு தலைமையில் ஒரே அமைப்பாக நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பிரதிநிதித்துவம் பெறாத வரையில், சமுதாயம் எதிர்கொள்ளும் ஃபாஸிஸம் முதலான பிரச்சனைகளை இறைவன் நாட்டம் கொண்டு வெல்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
"தொட்டவற்றிற்கெல்லாம் மக்களைக் கூட்டி ஆர்ப்பாட்டமும் போராட்டங்களும் நடத்திக் கொண்டிருப்பது, சமுதாயத்தைக் குறித்து தவறான எண்ணங்களைச் சமூகத்தில் விதைப்பதோடு சமுதாயத்தின் சக்தியும் வீணாக்கும். அதனால், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு இளைஞர்களிடையே செல்வாக்கு அதிகரிப்பதைத் தவிர சமுதாயத்திற்கு உருப்படியான எந்த பலனையும் பெற்றுத்தராது. அதற்காகப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் கூடாது என்று கூறவில்லை. அதை விட எளிதாக, சட்டரீதியான பிரச்சனைகளைச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியான பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும் சமயோஜிதமான முடிவுகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்" என்று கூறிய அவர், அதற்கு ஆதாரமாக, "அனைவருக்கும் கட்டாயப் பதிவுத் திருமணம்" என்ற தமிழக அரசின் முடிவைச் சமயோஜிதமாக அணுகி, முஸ்லிம் சமுதாயத்திற்குப் பலன் ஏற்படும் வகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்ததைச் சுட்டிக்காட்டினார்

தொடர்ந்து, சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பி அவர்களிடம் சத்தியமார்க்கம்.காம்  எழுப்பிய வினாக்களுக்கு அவர் அளித்த விரிவான விளக்கங்களைக் கீழே காண்க.
 
 
 சுதந்திர இந்தியாவில் இன்று அறுபது ஆண்டுகளுக்கும் பின்னர் முஸ்லிம்கள் பிரச்சினைகள் முறையாக தீர்வு காணப்படாமல் புறந்தள்ளப் படும் நிலைக்கு என்ன காரணம்? என்ன தீர்வு?
 
 
 
பாபரி மஸ்ஜித் தகர்க்கப் பட்டதோடு நாட்டின் இறையாண்மை தகர்க்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அலகாபாத் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு பற்றிய தங்கள் நிலைபாடு என்ன?
 
 
 
 
 
 அரசியல் கட்சிகள் முஸ்லிம்கள் விஷயத்தில் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி தங்கள் கருத்து என்ன?காரணம் என்ன?
 
 
 
 
முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய தாங்கள் எடுத்த முயற்சிகள் என்ன ? முஸ்லிம்கள் அரசியல் அமைப்பில் எப்படி செயல் பட வேண்டும்?
 
 
 
 
 
முஸ்லிம் லீக்கின் மாநாடு நடக்கவுள்ளது என்று கூறினீர்கள் அதனை பற்றி சற்று விபரமாக கூறவும்.
 
 
 
 
 
முஸ்லிம் சமுதாயம் தமது கருத்து வேறுபாடுகளை தமக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு, ஒருவர் கருத்தை மற்றவர் தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் ஒருவருக்கொருவர் மதித்து, உண்மை முஸ்லிம்கள் எனும் அடிப்படையில் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் ஓரணியில் சுயநலமின்றி ஒன்று திரள்வது மூலமே வலிமை பெற்ற சமுதாயமாக விளங்கிட முடியும். "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை" எனும் முதுமொழிக்கேற்ப ஒன்றுகூடுவதும் ஒருவருக்கொருவர் பேசி ஆலோசித்துக்கொள்வதும் கருத்து வேறுபாடுகள் களையப்படவும் பிரச்சினைகளிலிருந்து தீர்வு பெற்றிடவும் வழி வகுக்கும் என்பதை யாரும் மறுக்க இயலாது. மட்டுமின்றி, அதுவே அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியத்தை வழங்கிடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தும் இருக்க முடியாது.  



எனினும் இன்று இந்த ஒன்றிணைப்பிற்கு அவரவர் கொள்கை, ஜமாத்துக்கள், அமைப்புகள், கட்சிகள், இயக்கப் பெயர்கள் என்று இயங்கி வரும் சூழ்நிலைகளே ஒரு விதத்தில் தடைகளாக திகழ்கின்றன என்பதே யதார்த்தம். அவரவர் தமது கொள்கையை, கருத்தை, சரிகண்டு அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் / ஜமாஅத்தில் / இயக்கத்தில் உறுதியாக இருக்கின்றனர். தங்களது இயக்கத்தில் இல்லாதோரை வெறுக்கக் கூடிய, எதிரிகளாக பாவிக்கக் கூடிய நிலைக்கும் சிலர் அறிந்தோ அறியாமலோ தள்ளப்பட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக முழுமனித சமுதாயத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முஸ்லிம் சமுதாயம், பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு பலவீனமாகவும் பிறருக்கு அஞ்சிவாழக்கூடிய நிலைக்கும் உள்ளாகி வருகிறது.


இன்று முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையிலும் அமைப்புகள், ஜமாஅத்துக்கள் என்றும் தமக்குள் பிரிந்து செயல்படும் அதேநேரம் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத, முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்படுவதை ஒருபோதும் உள்ளத்தால் விரும்பாத துரோகி(அரசியல்வாதி)களோடு, தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி இணைந்து ஆதரவு அளிப்பதும் அவர்களோடு ஒற்றுமையாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. முஸ்லிம்கள் தமக்குள் கருத்து வேறுபட்டு, பலமிழந்து பிரிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், 'குதிரை குப்புறத் தள்ளிக் குழியும் பறித்த' உவமைபோல் ஜனநாயகம் எனும் முறையிலான வாக்கெடுப்பிலும் வாக்குகள் பிரிந்திடும் வகையிலும் முஸ்லிம்கள் தங்களுக்குள் எதிரெதிராகப் போட்டியிட்டும் தேர்தல் பணியாற்றியும் ஆதரவு அளித்து, எழுந்து நிற்க முடியாமல் வலுவிழந்து கிடக்கும் சமுதாயத்தைப் படுக்கையில் கிடத்தும் முயற்சியில் முஸ்லிம்களே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று தொடர்ந்தார் சகோதரர் அப்துர் ரஹ்மான் M.P.


இன்றைய நிலையில் முஸ்லிம்களின் சமுதாயப் பின்னடைவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒற்றுமையின்மையே அடிப்படை காரணம் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. முஸ்லிம்கள் அனைவரும் அவர்கள் எந்தக் கொள்கையில், கோட்பாட்டில், அமைப்பில், ஜமாஅத்தில், கருத்தில், இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சமுதாய நன்மைக்காக முதல்படியாக, அனைத்து சார்புடையவர்களும் ஒன்றிணைந்து பொதுநலக் குழுவொன்றினை அமைத்து அதன் மூலம் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் அரசியல் நிலைபாட்டில் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்பதே சத்தியமார்க்கம்.காமின் விருப்பம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தி ஒற்றைச் சமுதாயமாக்குவானாக!



நன்றி சத்தியமார்க்கம்.com

No comments:

Post a Comment