நெல்லிக்குப்பம் : பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரியுள்ளது.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந் நோய் பாதிக்கப்பட்டு பலர் உயிர் இழந் துள்ளனர். அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விற்பனை செய்வது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். குடிசை மாற்று திட்டத்திற்கு வழங்கும் நிதியை உயர்த்த வேண்டும். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கடலூர் பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வான்பாக்கம் பெண் ணையாற்றில் பாலம் கட்ட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 8ம் தேதி கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment