மஹாராஷ்டிரா: தானே மாவட்டம் அருகே உள்ள ஓஸ்வால் நகர் என்ற இடத்தில் இரண்டு குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் மார்பு மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் விசாரித்தனர்.
ரீடா-விஷால் தம்பதியின் மகன் ஓம் ஜெய்ஸ்வால் ( 5), மகள் ரித்திகா (2) ஆகிய இருவரும், விளையாடும்போது தவறி விழுந்து விட்டதாக' அந்த குழந்தையின் அத்தை ஹேமன்சு தெரிவித்தார். ஆனால், சற்று நேரத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன. அவர்களின் உடலை நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்தபோது கழுத்து நெரிக்கப்பட்டும், மார்பில் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இரண்டு குழந்தைகளும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த குழந்தைகளின் மீது துஷ்ட ஆவி பிடித்திருந்ததாகவும் அதற்காக அவர்களை அடித்துக் கொன்றதாகவும் அத்தை ஹேமன்சு தெரிவித்தார்.
இதையடுத்து கொலை வழக்கில் ஹேமன்சு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தைகளின் பெற்றோர் ரீடா, விஷால், மாமாக்கள் சஞ்சய் மற்றும் சதீஸ், தாத்தா சத்திய பிரசாத், பாட்டி சுமித்ரா ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: inneram.com
No comments:
Post a Comment