சவூதி தலைநகர் ரியாதிலிருந்து செயற்படும், மக்களின் விமானம்என்ற பொருள்படும் நாஸ்-ஏர் என்கிற குறைந்தவிலை விமானப் பயண நிறுவனம் இந்தியாவுக்கான தனது மூன்றாவது விமான சேவையை அறிவித்துள்ளது.
அதன்படி ரியாத் - மும்பை. ரியாத் - கொச்சின், என்று ஏற்கனவே உள்ள பயணத்தடத்துடன்,மூன்றாவது தடமாக ரியாதிலிருந்து கோழிக்கோடு என்கிற வழித்தடத்தை அறிவித்துள்ளது. இந்தப் பயணத்திற்கான விலை ச.ரியால் 499/=லிருந்து தொடங்குகிறது.
இவ்வாரம் முதல் செயற்பாட்டில் வரும் இந்தச் சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாள்களில் வானமேகுமாம்.
இந்தியாவுக்கான விமானச்சேவையில் இந்த அறிவிப்பு போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏறத்தாழ 20 இலட்சம் இந்தியர்கள் சவூதியில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதும் அதில் கேரளத்தவர்களே பெரும்பான்மையினர் என்பதும் அறிந்ததே.
Source: inneram.com
No comments:
Post a Comment