கிள்ளை: சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்த "ஷெட்' விற்றதை தடுத்ததால் கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதியில் சில தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்தது. சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக் குட் பட்ட முழுக்குத்துறை கிராமத் தில் "லெப் பர்சி மிஷின்' தொண்டு நிறுவனம் பல் வேறு வளர்ச்சிப் பணிகளை மேற் கொண் டது. அப்போது அவர்கள் பணியில் ஈடுபடும்போது தங்குவதற்காக அமைக்கப் பட்ட இரும்பு ஆங்கிள் மற் றும் தகர ஷீட்டினால் ஆன "ஷெட்'டை கிராமத்தினரின் செயல்பாட்டிற்கு வழங்கினர். இந்நிலையில் அந்த "ஷெட்'டை கிராம வளர்ச் சிக்காக தனி நபரிடம் கிராமம் சார்பில் விற்பனை செய்துள்ளனர்.
இதையறிந்த கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர், தொண்டு நிறுவனம் மூலம் கட் டப்பட்ட சமுதாயக் கூடத்தை விற்பனை செய்வது தவறு, தடை விதிக்க வேண்டும் என கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கிள்ளை போலீசார் விசாரணை நடத்தினர். ஆவேசமடைந்த முழுக் குத்துறை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட் டோர் தலைவர் சோழன் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அண்ணாமலை நகர் இன்ஸ் பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment