சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.
÷இது குறித்து அவர் தெரிவித்தது: சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்துக்கேற்ற தரமானச் சான்று விதை நெல் ரகங்களான பொன்மணி (இத 1009), பி.பி.டி. 5204, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 39, ஆடுதுறை 45 ஆகிய ரக விதை நெல்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
÷ஒருங்கிணைந்த தாயி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.5 மானியத்தில் தற்போது விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பு.முட்லூர், கீழமணக்குடி, புதுச்சத்திரம், பூவாலை மற்றும் பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிலும் சம்பா பருவத்துக்கேற்ற பி.பி.டி. 5204 நெல் விதை ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மானியத்தில் தற்போது விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
÷எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி
No comments:
Post a Comment