கடலூர்:கடலூர் நகரத்தில் சுற்றுச் சூழல் பாதிக்காவண்ணம் அமைக்கப்பட் டுள்ள இரு நவீன எரிவாயு தகன மேடைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதனால் உருவாகும் புகை சுகாதார கேடு விளைவிப் பதாக உள்ளது. எனவே பல இடங்களில் விறகு பயன்படுத்தி எரிப்பதை தவிர்த்து மின் தகனமேடை, நவீன எரிவாயு மேடை என பல பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளது.கடலூர் நகரில் மஞ்சக் குப்பம், கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டில் 80 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 தகன மேடைகள் அமைக் கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.இந்த தகன மேடையை பராமரிக்க அதிக நிதி தேவைப்படுவதால் அறக் கட்டளை உருவாக்கி அதன் மூலம் பராமரிப்பு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னை நிர்வாக இயக்குனரின் அறிவுரைப்படி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது மக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டியுள் ளதால் தனியாக வங்கிக் கணக்கு துவக்கப் பட்டுள்ளது.இந்த அறக்கட்டளைக் கான நிதி துவக்க விழா கடலூர் நகர்மன்றத் தலைவர் அலுவலகத்தில் வரும் 5ம் தேதி நடக்கிறது. இவ்விரு தகன மேடைகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment