சிதம்பரம்: சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்திற்கு மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.சிதம்பரம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் களை பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சைக் கிள் நிறுத்தத்தில் மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் திறந்தவெளி மைதானமாக உள்ளது.
சைக்கிளுக்கு நாள் ஒன்றுக்கு 3 ரூபாயும், பைக்குகளுக்கு 5 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நகராõட்சிக்கு அதிக வருமானம் கிடைத்தும் கூட நகராட்சி இதுவரை ஷெட் அமைக்க அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை.சாதாரண நாட்களை விட மழைக் காலங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் குளம் போல் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இது தொடர்பாக நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பல முறை கோரிக்கைகள் எழுப்பியும் நடவடிக்கை இல்லை.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஷெட் அமைக்க நகராட்சி மூலம் 15 லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது.சாதாரண அந்தஸ்தில் உள்ள நகராட்சியில் கூட சைக்கிள் நிறுத்தங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா மையமாகவும், தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ள சிதம்பரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பது வேதனையிலும் வேதனை.ismailpno
No comments:
Post a Comment