Islamic Widget

July 28, 2010

பாகிஸ்தானில் விமான விபத்து : 155 பேர் பலி

இஸ்லாமாபாத்: துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த விமானம் ஒன்று மந்தமான வானில‌ை காரணமாக விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 155 பேரும் பலியானார்கள். இது பாகிஸ்தானில் நடந்த மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.
147 பயணிகள், 8 ஊழியர்கள் உள்பட 155 பேருடன் துருக்கியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ஏர் ப்ளூ என்ற தனியார் விமானம் மார்கலா மலைப்பகுதியில் உள்ளாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் விபத்துக்குள்ளானது. பின்னர் அந்த விமானம் தீப்பிடித்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 155 பேரும் பலியானார்கள். இஸ்லாமாபாத்தில் தரையிரங்க வேண்டிய விமானம் விபத்துக்குள்ளான ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்தது. மோசமான வானிலை காரணமாக மீட்பு படையினர் பல மணி நேரங்களுக்கு பின்னரே மீட்டு பணியில் ஈடுபட முடிந்தது.
இந்த மீட்பு பணியில் சிறப்பு படையினர், விமானம், ராணுவம் , கப்பல் படையின் மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் மீட்பு படையினருடன் இறைந்தனர். ஆனால் கனமலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த விபத்து மோசமான வானிலை காரணமாகவே நிகழ்ந்தது. சரியான காரணம் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியானாதாக ‌கூறினார். இந்த விமானத்தில் 159 பேர் பயணம் செய்ய இருந்ததாகவும், ஆனால் ஒரு சிலர் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறினார். விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் விபத்து பற்றி தகவல் அறிய விமானநிலையத்திலும், மருத்துவமனைகளிலும் குழுமியுள்ளனர். இஸ்லாமாபாத் வர வேண்டிய பல விமானங்கள் லாகூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விபத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யுசூப் ரசா கிலானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
155 பேரை பலி கொண்ட இந்த விமான விபத்து அந்நாட்டு வரலாற்றில் மோசமான விபத்து ஆகும். முன்னதாக கடந்த 2006 ம் ஆண்டு முல்தானில் நடந்த விமான விபத்தில் 45 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியா இரங்கல் : இந்த விமான விபத்துக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியை தொடர்பு கொண்டு இந்தியாவின் இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

No comments:

Post a Comment