இமாம் ஹூசைனுடைய மனைவி ஜஹ்ரா பீவி தன் கணவர் குறித்த தகவல்களை அறிந்து அளித்துதவும் படி இந்திய வெளியுறவுத் துறைக்கு மனுச் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் மருத்துவர் நூர்முஹம்மது மூலமாக இந்திய வெளியுறவுத்துறையின் கவனம் ஈர்க்கப்பட்டு இருப்பதாக பரங்கிப்பேட்டை குழுமச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இமாம் ஹூசைன் பணிபுரிந்த இடத்தில் அவரது பொறியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக இமாம் ஹுசைனின் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இமாம் ஹுசைனுடன் ஓமன் சென்ற ரமேஷ் என்பவர் ஊர் திரும்பி விட்டார். இமாம் ஹுசைனை விடுதலை செய்து அனுப்ப அவருடய முதலாளி பணம் கேட்பதாக ரமேஷ் இமாம் ஹுசைனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். முழு விபரங்களும் ஓமனில் வசிக்கும் நபர்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும் என்றும் ரமேஷ் கூறியுள்ளார்.
நன்றி: mypno
No comments:
Post a Comment