Islamic Widget

October 20, 2012

பரங்கிப்பேட்டை காவல் நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை காவல் நிலையம் நேற்று முதல் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.பரங்கிப்பேட்டை காவல் நிலையம் கோர்ட் வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. போதுமான வசதி இல்லாததால் போலீசார் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மழைக்காலங்களில் அலுவலக பதிவேடுகள் நனைந்து சேதமடைந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் பரங்கிப்பேட்டை போலீஸ் லைனில் புதியதாக போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.

கடந்த 9ம் தேதி முதல்வர் , பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இருந்தும் உடனடியாக ஒயர்லெஸ் உள்ளிட்ட பொருட்கள் அங்கு எடுத்துச் செல்ல முடியாததால் பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தது. நேற்று ஒயர்லெஸ், பதிவேடுகள் உள்ளிட்ட பொருட்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய கட்டடத்தில் போலீஸ் நிலையம் இயங்கத் துவங்கியது.


நன்றி:  pno express

No comments:

Post a Comment