Islamic Widget

July 14, 2012

பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் நடத்திய இலவச மருத்துவ முகாம்


பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில்  நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைத்து அகில இந்திய இஸ்லாமிய மறுவாழ்வு ஸ்தாபனம் மற்றும் புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனை நடத்திய "இலவச மருத்துவ முகாம்" நல்லமுறையில் நடைபெற்றது.



இதில் அனைத்து தரப்பு மக்களும் ஆண்கள் பெண்கள் என சுமார் 350 பேர்  கலந்து கொண்டு பலன் பெற்றனர்.
கண் - காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல், உட்பட அனைத்து வியாதிகளும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த சேவை தொடரும் எனவும், பரங்கிப்பேட்டையில் ஒரு நிரந்தர மருத்துவ சேவைக்கு ஆவன செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.

நன்றி: manzil today pno

No comments:

Post a Comment