Islamic Widget

July 08, 2012

பரங்கிப்பேட்டையில் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!



தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்த ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
 
 
 
 
 
 
நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையிலிருந்து குற்றவாளிகளை போலீசார் காவல் நீட்டிப்பிற்கு பரங்கிப்பேட்டை கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்த போது, ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ஆனந்த் மகன் வினோத், புவனகிரி அடுத்த பு.உடை யூரைச் சேர்ந்த சதீஷ்வரன், 40, ஆகியோர் போலீசார் அழைத்துச் சென்ற கொலை குற்றவாளிகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் ஏட்டு வெங்கடேசன், 45, சம்பவ இடத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டினார். இதில் ஆத்திரமடைந்த வினோத், சதீஷ்வரன் இருவரும் ஏட்டு வெங்கடேசனை கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இது குறித்து ஏட்டு வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்வரனை கைது செய்து வினோத்தை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment